தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் திட்டம்: 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு + "||" + Government approves 28 Food Processing Projects more than 320 crore rupees in ten states

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் திட்டம்: 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் திட்டம்: 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, 

உணவு பதப்படுத்துதல், அதில் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல், விரிவுபடுத்துதல் போன்ற மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பில் 28 புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.107 கோடியே 42 லட்சம் மானியத்துடன் ரூ.320 கோடியே 33 லட்சம் செலவழிக்க மேற்கண்ட துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இந்த 28 திட்டங்களும் தமிழகம், கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், அசாம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் மராட்டியம் ஆகிய 10 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் தினமும் 1,237 டன் அளவுக்கு பதப்படுத்துதல் தொடர்பான பணிகள் நடைபெறும்.

இந்த திட்டத்தினால் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.