உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது + "||" + Brazil Coronavirus Outbreak Speeds Up Again As Cases Approach 6 Million

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 38 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா, 

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 38 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு 60 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா உயிரிழப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இருந்து வரும் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 552 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது.