உலக செய்திகள்

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி + "||" + U.S. judge dismisses Trump election lawsuit in Pennsylvania

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
வாஷிங்டன், 

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே கிடைத்தது. ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கும் தொடர்ந்து உள்ளது. 

இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார். தேர்தலில் முறைகேடு என்ற வாதத்திற்கு வலு சேர்க்க டிரம்ப் தரப்பினர் தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்ற கடுமையான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக இது அமைந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி எதிர்ப்பாளர்கள் மோதலால் பதற்றம்
அமெரிக்க நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்தினர். அவர்களுடன் எதிர்ப்பாளர்கள் மோதியதால் பதற்றம் ஏற்பட்டது.
2. ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது- டிரம்ப் குற்றச்சாட்டு
ஜோ பைடன் பெற்ற வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
3. டிரம்பிற்காக குடியரசு கட்சியினர் 60 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட முயற்சித்து வருவதாக தகவல்
டிரம்ப் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளின் செலவுக்காக, குடியரசு கட்சியினர் 60 மில்லியன் டாலர்கள் நிதி திரட்ட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உறுதியாக தெரிய வருவது எப்போது?
வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப் போவது அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
5. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.