மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் காங்கிரஸ் இன்று ஏர் கலப்பை பேரணி + "||" + Congress today air plow rally in Coimbatore against agricultural laws

வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் காங்கிரஸ் இன்று ஏர் கலப்பை பேரணி

வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் காங்கிரஸ் இன்று ஏர் கலப்பை பேரணி
வேளாண் சட்டங்களை எதிர்த்து கோவையில் காங்கிரஸ் சார்பில் இன்று ஏர் கலப்பை பேரணி நடக்கிறது.
சென்னை, 

தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக 22-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் கோவை, கருமத்தம்பட்டியில் விவசாய பாதுகாப்பு எழுச்சி மாநாடும், மாலை 5.30 மணியளவில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது. தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தவிருக்கும் இந்த மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை ஏற்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்லபிரசாத் மற்றும் சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். 

இம்மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மீனவரை கொன்ற வழக்கில் 2 பேர் கோவையில் சரண்; அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்
மீனவர் கொலை வழக்கில் 2 பேர் கோவையில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்.
2. நவ.22-ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
நவ.22-ம் தேதி கோவையில் விவசாயிகள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
3. சென்னை சென்டிரல்-மதுரை, கோவை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கூட்ட நெரிசலை தவிர்க்க பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4. வேளாண் சட்டங்களை எதிர்த்து அக்.11-ம் தேதி திருவண்ணாமலையில் கண்டன மாநாடு - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரும் 11-ம் தேதி, திருவண்ணாமலையில் கண்டன மாநாடு நடைபெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
5. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.