தேசிய செய்திகள்

புனே நகரில் பள்ளிகள் நாளை திறக்கப்படாது - மேயர் அறிவிப்பு + "||" + Pune schools set to reopen from Monday

புனே நகரில் பள்ளிகள் நாளை திறக்கப்படாது - மேயர் அறிவிப்பு

புனே நகரில் பள்ளிகள் நாளை திறக்கப்படாது - மேயர் அறிவிப்பு
புனே நகரில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என மேயர் முரளிதர் மகோல் அறிவித்து உள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்து இருந்தது. பின்னர் பள்ளிகளை திறப்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்தது. இதையடுத்து மும்பை, தானேயில் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை பள்ளிகள் திறப்படாது என அறிவிக்கப்பட்டது. எனினும் புனே மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தன.

இந்தநிலையில் புனே நகரில் நாளை பள்ளிகள் திறக்கப்படாது என மேயர் முரளிதர் மகோல் அறிவித்து உள்ளார். பெற்றோருடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேயர் தெரிவித்து உள்ளார். மேலும் புனே நகரில் பள்ளிகளை திறப்பது குறித்து டிசம்பர் 13-ந் தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

புனேயில் தீபாவளிக்கு முன் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து இருந்தது. தற்போது அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று புனே நகரில் புதிதாக 456 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 77 ஆயிரத்து 164 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்து 157 பேர் பலியாகி உள்ளனர்.