மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ + "||" + 'Red Alert' for 5 districts in Tamil Nadu

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் வருகிற 24 (செவ்வாய்க்கிழமை), 25-ந்தேதிகளில் (புதன்கிழமை) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட் அலர்ட்’டும், 24-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும், 25-ந்தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’டும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.

‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழையும், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
2. தமிழகத்தில் நிவர் புயல், மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் இன்று வருகை
தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
3. தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.
4. தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிவு
தமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிந்து இருக்கிறது.