தேசிய செய்திகள்

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம் + "||" + Unnao: Around 20 passengers on-board a bus injured after it overturned near Sirdharpur village

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்
உத்திரப்பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உன்னாவ்,

டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 82 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சிர்தார்பூர் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்  படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.