தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் - அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல் + "||" + We have increased the number of corona beds in hospitals - Delhi Health Minister Satyender Jain

டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் - அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்

டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் - அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்
மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். ஐ.சி.யூ படுக்கைகளும் 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளன, அடுத்த நாட்களில் மேலும் சேர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக, டெல்லியில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் தேசிய தலைநகரான யூனியன் இல்லத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 3.7 லட்சத்திற்கும் அதிகமானோர் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 879- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், 111 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 117 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்த ரூ.76½ கோடி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை மேம்படுத்த ரூ.76½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.