தேசிய செய்திகள்

ஹர் கர் ஜல் திட்டம்; ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி உரை + "||" + Har Kar Jal Project; 2.6 crore families benefit in a year: PM Modi's speech

ஹர் கர் ஜல் திட்டம்; ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் பயன்: பிரதமர் மோடி உரை

ஹர் கர் ஜல் திட்டம்; ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் பயன்:  பிரதமர் மோடி உரை
ஹர் கர் ஜல் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியே தூய்மையான குடிநீர் பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் குடிநீர் வினியோக திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.  இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து உள்ளார்.  இதன்படி இரு மாவட்டங்களின் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.  இதன்பின்னர் பிரதமர் மோடி உரையாற்றும்பொழுது, நாடு விடுதலை அடைந்த பின்பு பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பகுதி ஒன்று உண்டெனில், அது இந்த பகுதியே ஆகும்.

அதிகளவு வளங்களை கொண்ட பகுதியாக இருந்தபோதிலும், விந்தியாசலம் அல்லது பண்டல்காண்ட் பகுதிகள் பற்றாக்குறை வசதிகளை கொண்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளன.

இந்த பகுதியில் பல்வேறு ஆறுகள் ஓடியபோதிலும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே அறியப்பட்டு வந்துள்ளன.  இதனால் இந்த பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கலாசாரம் உலகம் முழுமைக்கும் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது; பிரதமர் மோடி உரை
இந்திய கலாசாரம் மற்றும் புனித நூல்கள் உலகம் முழுமைக்கும் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
2. நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்; பிரதமர் மோடி உரை
நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டி கொள்கிறேன் என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
3. நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி விகிதம் சரிவு; பிரதமர் மோடி உரை
உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி விகிதம் சரிந்துள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.
4. மும்பை-நாக்பூர் விரைவு சாலையோரம் 24 நகரங்கள் உருவாக்கப்படும் சுதந்திர தின விழாவில் உத்தவ் தாக்கரே உரை
மாநிலம் முழுவதும் 29½ லட்சம் விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மும்பை- நாக்பூர் விரைவு சாலையோரம் 24 நகரங்கள் உருவாக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
5. பிரதமர் மோடியின் எல்லை பிரச்சினை தொடர்பான உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்
பிரதமர் மோடியின் எல்லை பிரச்சினை தொடர்பான உரையை சீன சமூக ஊடகம் நீக்கி உள்ளது.