தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பசுவை புனித மாதாவாக அறிவிக்க முடிவு + "||" + Madhya Pradesh Cabinet decides to declare cow as Holy Mother

மத்திய பிரதேசத்தில் பசுவை புனித மாதாவாக அறிவிக்க முடிவு

மத்திய பிரதேசத்தில் பசுவை புனித மாதாவாக அறிவிக்க முடிவு
பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட பசுவை புனித மாதாவாக அறிவிக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
போபால்,

மத்திய பிரதேச அமைச்சரவை கூட்டம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் வீடியோ இணைப்பு வழியே நடந்தது.  பசு தொடர்புடைய ஆலோசனை கூட்டத்தில், உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா, வனத்துறை மந்திரி விஜய் ஷா உள்ளிட்ட மந்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பசுவால் கிடைக்க கூடிய பல நன்மைகளை பற்றியும் மற்றும் அதன் உப பொருட்களால் கிடைக்கும் பலன்களை பற்றியும் மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க பசுவை புனித மாதா என அறிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய சவுகான், சுற்று சூழலை பாதுகாக்க பசுவை பாதுகாப்பது அவசியம்.  ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளின் உடல்நலன் மேம்பட பசும்பால் பயன்படும்.  மரம் மற்றும் ரசாயன உரத்திற்கு மாற்றாக பசுஞ்சாணம் பயன்படும்.

இவை சுற்று சூழலை காக்கும்.  அதனுடன், பசுவின் கோமியம் பூச்சி கொல்லியாகவும் மற்றும் மருந்து பொருளாகவும் பயன்படும் என கூறினார்.