மாநில செய்திகள்

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'நிவர்' என பெயர் - வானிலை மையம் அறிவிப்பு + "||" + Named 'Nivar' for a storm forming in the Bay of Bengal - Meteorological Center announcement

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'நிவர்' என பெயர் - வானிலை மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'நிவர்' என பெயர் - வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'நிவர்' என்று பெயரிடப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு, ‘நிவர்’ என்று பெயரிடப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 25 ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - வானிலை மையம் தகவல்
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.