தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு + "||" + 2,000 new Kosalas to be set up in MP; CM announcement

மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பசுவால் கிடைக்க கூடிய பல நன்மைகளை பற்றியும் மற்றும் அதன் உப பொருட்களால் கிடைக்கும் பலன்களை பற்றியும் மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க பசுவை புனித மாதா என அறிவிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், மாநிலத்தில் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ஆதரவற்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன.  மத்திய பிரதேச அரசு 2 ஆயிரம் புதிய கோசாலைகளை கட்ட உள்ளது.

அரசுடன் சேர்ந்து, இவற்றில் சில என்.ஜி.ஓ.க்களாலும் நடத்தப்படும்.  இதேபோன்று, மாநிலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ள குழந்தைகளுக்கு முட்டைகளுக்கு பதிலாக பசும்பால் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெல்மெட் இல்லை எனில் எரிபொருள் இல்லை: மேற்கு வங்காள அரசு அறிவிப்பு
ஹெல்மெட் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.
3. டிசம்பர் மாதம் முடியும் வரை கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
4. டெல்லியில் ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணி; முதல் மந்திரி அறிவிப்பு
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.
5. பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை; பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த பிரதமர் இம்ரான் கான் தடை விதித்துள்ளார்.