தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 6,746- பேருக்கு கொரோனா தொற்று + "||" + Delhi reported 6,746 new #COVID19 cases, 6,154 recoveries, and 121 deaths in the last 24 hours, according to Delhi Health Department

டெல்லியில் புதிதாக 6,746- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் புதிதாக 6,746- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. 

சில கட்டுப்பாடுகளையும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  காற்று மாசு, கடும் குளிர் போன்ற காரணங்களாலும் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,746- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 6,154 பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 121 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 29 ஆயிரத்து 863- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 260 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,391- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 40 ஆயிரம் பேர் தற்போது நிலவரப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார்.
2. ஆந்திராவில் புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் இன்று புதிதாக 599- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியத்தில் புதிதாக 5,229- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இன்று புதிதாக 5,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி(நாளை) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.