மாநில செய்திகள்

தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு + "||" + Udayani Stalin,Releasd after 7 hours, who arrested early evening today for defying govt orders

தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
மயிலாடுதுறை குத்தாலத்தில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.

மயிலாடுதுறை 

 தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கபட்டார்.  வேறு இடத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்ததால் 6 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாளையும் பரப்புரையை தொடருவேன். அமித்ஷா சாலையில் இறங்கி செல்கிறார். கூட்டம் கூடுகிறது. அதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் அது அரசின் நிகழ்ச்சி என்கிறார்கள். 

ஆனால் அந்தக் கூட்டத்தில்தான் அரசியல் பேசி இருக்கிறார்கள். கூட்டணியை அறிவித்துள்ளனர். பாஜகவின் அடிமை அரசான அதிமுகவின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்." எனத் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது என்று, மல்லிப்பட்டினம் அருகே உதயநிதிஸ்டாலின் கூறினார்.
2. ‘நிவர்’ புயல் காரணமாக ‘விடியலை நோக்கி’ பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு - 28-ந் தேதி மீண்டும் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
‘நிவர்’ புயல் காரணமாக ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், வருகிற 28-ந் தேதி மீண்டும் தொடங்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
3. தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
4. உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. தி.மு.க.வினரின் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.