தேசிய செய்திகள்

மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்: காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் + "||" + Congress should hold polls if it wants to become a national alternative, says Ghulam Nabi Azad

மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்: காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்:  காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
5 நட்சத்திர கலாசாரத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  எங்கள் (காங்கிரஸ்) கட்சியின் கட்டமைப்பு  சிதைந்துவிட்டது.  கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. 

அதன்பின் அந்த கட்டமைப்பு மூலம் ஏதேனும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சரியாக வேலை செய்யும். ஆனால், தலைவரை மாற்றுவதால் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்றால் அது தவறு. கட்டமைப்பை மாற்றுவதன் மூலமே அது நடைபெறும்.

எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை, தலைமை ஏற்று கொண்டது. தேசிய அளவில் மாற்றாக இருக்கவும், கட்சிக்கு புத்துயிர் அளிக்கவும்  உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்”என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு - மோடி, ராகுல் காந்தி இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2. தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
3. உள்கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் பேசக்கூடாது- கபில் சிபலுக்கு சல்மான் குர்ஷித் கண்டிப்பு
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித், கபில் சிபல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.
4. பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு பற்றி விவாதிக்க காங்கிரசில் 3 புதிய குழுக்கள் நியமனம்
பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள்
5. தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.