தேசிய செய்திகள்

வகுப்புவாத அரசியல் ஐதராபாத்தில் பலிக்காது: அசாதுதின் ஓவைசி சொல்கிறார் + "||" + 'Communal politics will not work in Hyderabad': Asaduddin Owaisi attacks BJP ahead of GHMC polls

வகுப்புவாத அரசியல் ஐதராபாத்தில் பலிக்காது: அசாதுதின் ஓவைசி சொல்கிறார்

வகுப்புவாத அரசியல் ஐதராபாத்தில் பலிக்காது: அசாதுதின் ஓவைசி சொல்கிறார்
ஐதராபாத்தில் வகுப்புவாத அரசியல் பலிக்காது என்று அசாதுதின் ஓவைசி எம்.பி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,

ஐதராபாத்தில் விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கு மதசாயம் பூச பாஜக முயற்சிப்பதாக விமர்சித்துள்ள அசாதுதின் ஓவைசி, ஐதராபாத்தில் வகுப்புவாத அரசியல் பலிக்காது என்று தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஐதராபாத் எம்.பி ஓவைசி கூறியதாவது: - “ பாஜக தலைவரை நள்ளிரவில் எழுப்பி, ஏதேனும் ஒரு பெயரை கூறுங்கள் என்றால், அவர்கள் ஓவைசி என்றே சொல்வார்கள். அதன்பிறகு தேசத்துரோகி,  பயங்கரவாதி என வந்து கடைசியாக பாகிஸ்தான் என முடிப்பார்கள். ஆனால், தெலுங்கானாவிற்கு எவ்வளவு நிதி உதவியை அளித்துள்ளனர் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.  

ஐதராபாத்தில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மோடி அரசு ஐதராபாத்திற்கு என்ன மாதிரியான நிதி உதவி அளித்தது? வெள்ள பாதிப்பு சமயத்தில் மக்களுக்கு உதவாத காரணத்தால் தற்போது நடைபெற இருக்கும் தேர்தலுக்கு மத சாயம் பூச பாஜகவினர் முயற்சிக்கின்றனர். ஐதராபாத்தில் இது பலனளிக்காது”என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க அழகிரி பரபரப்பு பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று மு.க அழகிரி மதுரையில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
2. பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது: ராகுல் காந்தி
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
3. ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்பதா? ஒவைசி கடும் விமர்சனம்
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐதராபாத்தை பெயரை பாக்யநகராகப் பெயர் மாற்றுவோம் என்று பேசியதற்கு அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4. ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத் ஆவேசம்
ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.