மாநில செய்திகள்

18 அடி உயரம் வரை கடல் அலை சீற்றம் இருக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை + "||" + Heavy Wind wave expected on coastal area: Chennai meteorological department

18 அடி உயரம் வரை கடல் அலை சீற்றம் இருக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

18 அடி உயரம் வரை கடல் அலை சீற்றம் இருக்கும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சூறாவளி காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, 

வங்க கடலில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக உருவாக இருக்கிறது. இந்த புயல் காரணமாக வங்க கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் கடற்கரையோர பகுதிகளில் சூறாவளி காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, புயல் கரையை கடக்கும் வரை தமிழகத்தின் வட கடலோர பகுதிகளான கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை கடல் அலை 8 அடி முதல் 18 அடி உயரம் வரை சீற்றத்துடன் காணப்படும் என்றும், தென் கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 5 அடி முதல் 10 அடி உயரம் வரை சீற்றத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை மையம்
வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது.
3. வங்கக் கடலின் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
4. அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும்; வானிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு
அடுத்த 3 மாதங்களுக்கு வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
5. தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.