தேசிய செய்திகள்

தமிழக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார் அமித்ஷா + "||" + Amit Shah returned to Delhi after completing his Tamil Nadu tour

தமிழக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார் அமித்ஷா

தமிழக சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பினார் அமித்ஷா
தமிழகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சென்னைக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கத்தை தொடங்கி வைத்ததோடு, மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் உள்பட 7 திட்டங்களுக்கு சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அரசு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதையடுத்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் அவர் தங்கியிருந்த ஓட்டல் லீலா பேலஸில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமித்ஷா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை சந்தித்து அமித்ஷா பேசினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் காலை 10.30 மணிக்கு டெல்லி திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின், கே.பாண்டியராஜன், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.