மாநில செய்திகள்

அ.தி.மு.க.வினர் விண்ணப்ப கட்டணத்தை இன்று முதல் திரும்பப் பெறலாம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Application fee can be withdrawn from today

அ.தி.மு.க.வினர் விண்ணப்ப கட்டணத்தை இன்று முதல் திரும்பப் பெறலாம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வினர் விண்ணப்ப கட்டணத்தை இன்று முதல் திரும்பப் பெறலாம்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சென்னை, -

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருந்தநிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரிய கட்சியினர் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் நடைபெறாத காரணத்தால் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்திருந்த கட்சியினர் அனைவரும் தாங்கள் செலுத்தி இருக்கும் விண்ணப்ப கட்டணத் தொகையை தலைமைக் கழகத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டதின் பேரில் பலர் தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்து, விண்ணப்ப கட்டண தொகையை திரும்பப் பெறாத கட்சியினருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிடும் வகையில், அவர்கள் அனைவரும் வருகிற 23-ந்தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டண தொகைக்கான அசல் ரசீதுடன் தலைமை கழகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படாது.