தேசிய செய்திகள்

உள்கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் பேசக்கூடாது- கபில் சிபலுக்கு சல்மான் குர்ஷித் கண்டிப்பு + "||" + "Apparent To Anyone Not Blind": Salman Khurshid On Support For Gandhis In Congress

உள்கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் பேசக்கூடாது- கபில் சிபலுக்கு சல்மான் குர்ஷித் கண்டிப்பு

உள்கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் பேசக்கூடாது- கபில் சிபலுக்கு சல்மான் குர்ஷித் கண்டிப்பு
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித், கபில் சிபல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.
புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, கட்சி தலைமைக்கு எதிராக மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்தார். காங்கிரசை மாற்று சக்தியாக மக்கள் பார்க்கவில்லை என்றும், கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலம் முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் காரிய கமிட்டி நிரந்தர அழைப்பாளருமான சல்மான் குர்ஷித், கபில் சிபல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து நேற்று பேட்டி அளித்தார். சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

கட்சியில் கருத்துகளை தெரிவிக்க பல தளங்கள் உள்ளன. அங்கு சொல்வதை விட்டு விட்டு, பொதுவெளியில் பிரச்சினைகளை பேசக்கூடாது. அப்படி பேசுவது, கட்சியை காயப்படுத்துகிறது. எனது கருத்தை சொல்ல தலைமை வாய்ப்பு கொடுத்தது. அதுபோல், அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இதில், தலைமை கேட்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியின் தேர்தல் கமிட்டி, கட்சி தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா காரணமாக, சிறிது தாமதமாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு - மோடி, ராகுல் காந்தி இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2. தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
தலைவர்களின் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டி உள்ளார்.
3. மாற்று கட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள்: காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
5 நட்சத்திர கலாசாரத்தை ஒழிக்கும் வரையில், நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
4. பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு பற்றி விவாதிக்க காங்கிரசில் 3 புதிய குழுக்கள் நியமனம்
பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள்
5. தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.