உலக செய்திகள்

அமெரிக்காவை விட மலிவு விலையில் ரஷிய தடுப்பூசி + "||" + Russian vaccine cheaper than the United States

அமெரிக்காவை விட மலிவு விலையில் ரஷிய தடுப்பூசி

அமெரிக்காவை விட மலிவு விலையில் ரஷிய தடுப்பூசி
அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,875 முதல் ரூ.2,775 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிற நிலையில் அவற்றுக்கான சந்தை சூடுபிடிப்பதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கி உள்ளன.

அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,875 முதல் ரூ.2,775 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பைசர் நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,500 ஆகும்.

இந்த அமெரிக்க தடுப்பூசிகளை விட ரஷியா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் மலிவாக இருக்கும் என்று அதன் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.