திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் வியூகம், பிரச்சாரப் பணி, தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து இறுதிகட்ட ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு. கே.என்.நேரு, பொன்முடி, ஆர்.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திமுக தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.