ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலி: புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Russia reports record 491 coronavirus deaths, 24,326 new infections
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலி: புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலியாகினர். புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21,38,828 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 031 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 16,34,671 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,67,126 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,300 பேர் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய உச்சம் என பதிவாகி உள்ளது. 2,104 பேர் இந்த வைரசால் உயிரிழந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.