தேசிய செய்திகள்

காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார் + "||" + Senior Congress leader Ahmed Patel passes away, tweets his son Faisal Patel.

காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்

காங். மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார். அவருக்கு வயது 71.
புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(71). கடந்த அக்டோபர் 1-ம் தேதி கொரோனாவில் பாதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.  

அகமது படேலின் நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்டநிலையில் அந்த பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவியது. இதையடுத்து,குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி  அகமது படேல் சிகிச்சைக்காக திடீரென அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி? மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி? என்பது குறித்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
2. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
3. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
4. காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
5. புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு?
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.