உலக செய்திகள்

அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு + "||" + Corona case count approaching 1.30 crore in the United States

அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் 1.30 கோடியை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1.65 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதோடு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,100 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதே நேரம் கொரோனாவில் இருந்து இதுவரை 76 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், அலாஸ்கா, மிசோரி, வடக்கு டகோட்டா, இண்டியானா, விஸ்கான்சின், ஒஹையோ, மைனே மற்றும் ஆரேகான் ஆகிய 9 மாகாணங்களில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா:துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் பலி
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
2. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
3. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.
4. அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் காலமானார்.
5. வரலாற்றில் முதல் முறை அமெரிக்க ராணுவ மந்திரியாக கருப்பினத்தவர் நியமனம்
அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.