டென்னிஸ்

கர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா + "||" + Pregnancy and having a baby made me a better person said Sania in an open letter

கர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா

கர்ப்பம் மற்றும் குழந்தை  என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா
செரீனாவில்லியம்ஸ் உங்கள் கதை இந்த கடிதத்தை எழுத எனக்கு ஊக்கமளித்தது. #BeingSerena ஆவணப்படம் எனது அனுபவத்தை எதிரொலிக்கிறது… என சானியா மிர்சா கூறி உள்ளார்.
மும்பை: 

டிஸ்கவரி பிளஸில் செரீனா வில்லியம்ஸ் ஆவண படத்தை பார்த்து  இந்திய டென்னிஸ் வீராங்கனை தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-

டிஸ்கவரி பிளஸில் 'செரீனாபடத்தை ' பார்த்த பிறகு 'எல்லா தாய்மார்களுக்கும் ஒரு நம்பிக்கை அளித்தது . செரீனாவில்லியம்ஸ் உங்கள் கதை இந்த கடிதத்தை எழுத எனக்கு ஊக்கமளித்தது. #BeingSerena ஆவணப்படம் எனது அனுபவத்தை எதிரொலிக்கிறது… என சானியா மிர்சா கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

"கர்ப்பம் என்பது என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் அனுபவித்த ஒன்று. நான் அதைப் பற்றி யோசித்தேன், நம் அனைவருக்கும் இதைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கருத்து இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் நீங்கள் அதை அனுபவித்தவுடன், அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்களை முற்றிலும் மாற்றுகிறது.

"கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட  வருவது ஒரு சவாலாக இருக்கும், மேலும் நான் செரீனாவுடனும் மற்ற ஒவ்வொரு பெண்ணுடனும் என்னை தொடர்புபடுத்த முடியும். இது அனைவருக்கும் சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் உங்கள் உடல் கர்ப்பத்திற்கு பிந்தைய காலங்களில் எவ்வாறு செயல்படப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. 

கர்ப்ப காலத்தில் நான் 23 கிலோ எடை கூடிய  பிறகு மீண்டும் விளையாடுவது பற்றி உறுதியாக நம்பவில்லை. கர்ப்பம் மற்றும் ஒரு குழந்தையைப் பெற்றிருப்பது என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது. "இருப்பினும், நான் குழந்தை பெற்ற பிறகு நிறைய ஒர்க்அவுட்  மற்றும் மிகவும் கண்டிப்பான உணவுகளுடன் சுமார் 26 கிலோவை குறைத்து  மீண்டும் விளையாட வந்தேன், ஏனென்றால் அது எனக்குத் தெரியும், நான் டென்னிசை நேசிக்கிறேன்.  கடைசியாக, ஹோபார்ட்டில்  நான் வென்றது, அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நேர்மையாக என்னைப் பற்றி பெருமிதம் அடைந்தேன், என்னால் மீண்டும் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட முடிந்தது, நான் மனதளவில் தயாராக இருந்தேன் என்று நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

2010 ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை  மணந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா, அக்டோபர் 2018 இல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு, 2020 ஜனவரியில், டென்னிஸ் சுற்றுக்குத் திரும்பி, டபிள்யூ.டி.ஏ ஹோபார்ட் இன்டர்நேஷனல் 2020 இல் நதியா கிச்செனோக்குடன் இணைந்து  இரட்டையர் பட்டத்தை வென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் பிப். 8 முதல் 21வரை நடைபெறும் என அறிவிப்பு!
ஆஸ்திரேலிய ஓபன் பிப். 8 முதல் 21வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. டென்னிசில் மிகச் சிறந்த வீரர் ஜோகோவிச் தான் முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்
டென்னிசில் மிகச் சிறந்த வீரர் என்று கேட்டால், நான் ஜோகோவிச் பெயரைத்தான் கூறுவேன் என முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்
3. உலகின் 6 ஆம் இடத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றினார்
செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, தனது புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.
4. பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றச்சாட்டு
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால் வீரர் அதனை மறுத்து உள்ளார்.