கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை + "||" + Countries with declining corona infection needs to stay alert - World Health Center warns
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா,
உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், உலக அளவில் இருவரை 6.08 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வீசி வரும் நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “கொரோனா வைரஸ் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.