மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.80 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
மும்பை,
நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் சமீப நாட்களாக மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 20 ஆயிரத்து 059 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 362 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மராட்டியத்தில் 90 ஆயிரத்து 997 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 85 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,071 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 5,26,555 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மும்பையில் இன்று புதிதாக 940 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 814 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல நகரில் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 515 பேர் மீண்டு வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 860 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது மும்பையில் 13 ஆயிரத்து 157 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரில் புதிதாக 18 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை நகரில் 10 ஆயிரத்து 791 பேர் நோய் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர்.