மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,600 பேருக்கு தொற்று உறுதி + "||" + 5,600 new coronavirus cases in Maharastra, 111 deaths, 5,027 recover
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,600 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
மும்பை,
நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் சமீப நாட்களாக மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மராட்டியத்தில் 5 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 32 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 027 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மராட்டியத்தில் 88 ஆயிரத்து 537 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 111 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,357 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 5,47,791 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.