தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் + "||" + Pakistani army launches another offensive in Kashmir

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு, 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்ததோடு, பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் அவ்வப்போது பதிலடி கொடுக்கப்படுகிறது.

இதற்கிடையே கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் சர்வதேச எல்லை கோட்டு பகுதியில் உள்ள கரோல் கிருஷ்ணா, பன்சார், குர்னாம் பகுதிகளில் விடிய, விடிய பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினம் இரவு 9.50 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தது. இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தியா தரப்பில் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
2. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு
காஷ்மீர் எல்லையில் கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
3. சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்: அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4. விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன் - ஜடேஜா
4 விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும் ஸ்டீவன் சுமித்தின் ரன்-அவுட்டை தான் மீண்டும், மீண்டும் பார்க்க விரும்புவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்தார்.
5. காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.