திமுக, அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் - ஒ.பன்னீர்செல்வம் உறுதி + "||" + Appropriate recognition for those who have joined AIADMK from DMK and AMMK - O.Panneerselvam confirmed
திமுக, அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் - ஒ.பன்னீர்செல்வம் உறுதி
திமுக, அமமுக-வில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
தேனி,
தேனி பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அமமுக மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் பலர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய பன்னீர்செல்வம், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அனைவரும் இணைந்து செயல்படும் போது, ‘அதிமுகவை எதிர்த்து நிற்கும் சக்தி யாருக்கும் இல்லை’ என்ற நிலை தற்போது உருவாகி இருப்பதாக தெரிவித்த அவர், கட்சியில் இணைந்திருக்கும் திமுக மற்றும் அமமுகவினருக்கு அதிமுகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண் எழுப்பிய சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திமுக அதிமுக போட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.