மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Oxygen cylinder to be fitted in paranormal medical units for corona treatment - Madurai HighCourt order

கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, 

சித்த மருத்துவமனை தொடர்பான பல்வேறு வழக்குகளின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, “கொரோனா தொற்றுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ சிகிச்சை வார்டுகள் எத்தனை? அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்யப்பட்டு உள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல், “தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ வார்டுகள் உள்பட மொத்தம் 33 சித்த மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. அந்த பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “கொரோனா தொற்று நோயாளிகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படும் என்பதால் 33 சித்த மருத்துவ சிகிச்சைக்கான பிரிவுகளிலும் உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
2. கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா குணமடைந்து வீடு திரும்பினார்.
3. குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. கொரோனா சிகிச்சை: குணமடைந்த நடிகர் சூர்யா வீடு திரும்பினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்.
5. கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.