உலக செய்திகள்

அமெரிக்காவில் ஜோ பைடன் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை + "||" + Hunter Biden says U.S. prosecutor investigating his taxes

அமெரிக்காவில் ஜோ பைடன் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை

அமெரிக்காவில் ஜோ பைடன் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை
அமெரிக்காவில் ஜோ பைடனின் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்க உள்ள ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. டெலவாரே மாகாணத்தில் மத்திய அரசு வக்கீல்கள் இந்த விசாரணையை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி ஹண்டர் பைடன் கூறும்போது, “இதை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால் நான் வரி விவகாரங்களை சரியான முறையில், சட்டரீதியில் கையாண்டு இருப்பதை இந்த விசாரணை காண்பிக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விசாரணை பற்றி தனக்கு செவ்வாய்க்கிழமையன்று தெரிய வந்துள்ளதாகவும் ஹண்டர் பைடன் தெரிவித்தார்.

ஜோ பைடன் துணை ஜனாதிபதியாக இருந்தபோது, ஹண்டர் பைடன் உக்ரைன் மற்றும் சீனாவில் தனது வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். இது தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் பேசுபொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமாதம் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறவரையில் இந்த விசாரணை நீண்டால், இந்த விசாரணையை புதிய அட்டார்னி ஜெனரல் மேற்பார்வையிடும் நிலை உருவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் சிகாகோவில் போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல்
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை கேரளத்துக்கு மாற்றக் கூடாது என்று ஜெயராஜின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
3. ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்படுவர் - ஜோ பைடன் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப்பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
4. ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் தங்கள் படையினர் அனைவரையும் திரும்பப்பெற அமெரிக்கா திட்டம்
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்கா தனது படையினர் முழுவதையும் திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது