உலக செய்திகள்

அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா + "||" + US reports over 400,000 new Covid 19 cases

அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் புதிய உச்சமாக, ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ருத்ரதாண்டவமாடி வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதிய உச்சம் ஆகும்.

இதற்கு முன்பாக கடந்த 11-ந் தேதியன்று ஒரே நாளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதே உச்சமாக இருந்தது. அங்கு கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,756 பேர் பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 80 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 3 லட்சத்து 23 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.இந்த புள்ளிவிவரங்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புமையம் (சிடிசி) வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் நடைபெற்று வந்தாலும், அந்த நோய்த்தொற்று கட்டுப்பாடின்றி பரவி வருவது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
2. 15 வெளிநாடுகளில் தலைமை பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் தலைமை பதவிகளை வகித்து வருகிறார்கள்.
3. அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் மேலும் 58,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. "என் காலத்துக்கு பிறகு அவன் கஷ்டப்படக்கூடாது" வளர்ப்பு நாய் மீது ரூ.36 கோடி சொத்தை எழுதிவைத்தவர்
என் காலத்துக்கு பிறகு அவன் கஷ்டப்படக்கூடாது வளர்ப்பு நாய் மீது ரூ.36 கோடி சொத்தை எழுதிவைத்த அதன் உரிமையாளர்.
5. இந்தியா- சீனா எல்லை பிரச்சினையில் அமைதியான தீர்வுக்கு ஆதரவு: அமெரிக்கா
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.