தேசிய செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து 2 நாட்களில் மும்பை வந்த 745 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர் + "||" + 745 passengers who arrived in Mumbai in 2 days from the UK were isolated

இங்கிலாந்தில் இருந்து 2 நாட்களில் மும்பை வந்த 745 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

இங்கிலாந்தில் இருந்து 2 நாட்களில் மும்பை வந்த 745 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
கடந்த 2 நாட்களில் இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பை வந்த 745 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மும்பை, 

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உருமாறிய இந்த நோய் தொற்று, சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. அதனால், 31-ந் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் மராட்டிய அரசு உத்தரவிட்டது.

அந்த வகையில் மேற்கண்ட 2 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து 1,688 பயணிகள் மும்பை வந்து இறங்கியுள்ளனர். அவர்களில் 745 பேர் மும்பையில் உள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மற்றவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 7 நாட்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

7-வது நாளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரி அல்லது ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவார்கள். நோய் தொற்று இல்லாதவர்கள் வீடுகளில் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் இருந்து 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தது
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிஜன் நிறுவனம் இந்தியாவிற்கு 1,200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
2. இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வருகை
சென்னை விமான நிலையத்திற்கு இங்கிலாந்தில் இருந்து 2 விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
3. இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயம் - கொரோனா பரிசோதனைக்கு பயந்து உறவினர் வீடுகளில் பதுங்கலா?
இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி திரும்பிய 3 பயணிகள் மாயமாகினர். அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து உறவினர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளனரா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. புதியவகை கொரோனா எதிரொலி: இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி 7ம் தேதி வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு
இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. இங்கிலாந்தில் இருந்து பெங்களூரு வந்த 151 பேரை தேடும் பணி தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 151 பேரை சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.