மாநில செய்திகள்

நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல் + "||" + Actor Rajinikanth will have moral support for AIADMK - Minister T. Jayakumar Information

நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு இருக்கும் - அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வராவிட்டாலும் அவருடைய தார்மீக ஆதரவு அ.தி.மு.க.வுக்கு என்றும் இருக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடமாடும் டீக்கடை திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் எம்.சி. சம்பத் கூறும் போது, சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் முதல் திட்டத்திற்கான விரிவாக்கப்பணிகள் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை உள்ள பாதை பிப்ரவரி இறுதிக்குள் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது என்றார்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் குறித்து ஒரு முடிவை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். பிரதானமாக அவர் சொல்வது உடல்நிலைதான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கருத்தின் அடிப்படையில். உடலுக்கும், உயிருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்பட்டுவிட கூடாது என்று அவர் உடல்நிலை கருதி எடுத்திருக்கும் இந்த முடிவை வெளிப்படுத்தி உள்ளார். இதில் அ.தி.மு.க. சார்பில் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. ஆனாலும் கூட அவர், மிகுந்த ஆயுளுடன் வாழ்ந்து இன்று போல என்றும் அவர் தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.

அவருடைய ஆதரவை பொருத்த வரையில் எப்போதும் நல்லவர்களுக்கு ஆதரவு தருவார். தமிழகத்தில் அவ்வாறு பார்க்கும் போது, நல்லவர்கள் என்று சொன்னால் அது அ.தி.மு.க.தான். தமிழக மக்களுக்கு எப்போதும் நல்லது செய்கின்ற அ.தி.மு.க. அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவரை பொருத்தவரை எதையும் சீர்தூக்கியும், ஒப்பிட்டும் பார்ப்பார். அந்தவகையில் பொதுமக்களுக்கு நல்லது செய்வதில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க. தான் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது, சமூக நீதிக்கான மாநிலமாக செயல்படுவது போன்ற விஷயங்கள் அனைத்தும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தெரியும். அப்படி இருக்கும் போது, தி.மு.க. ஆட்சியில் எந்த அளவு தமிழ்நாடு சீரழிந்தது. சின்னாபின்னமாக்கப்பட்டது. சட்டம்- ஒழுங்கு மோசமானது. அவர் சார்ந்து இருக்கிற சினிமா துறை எந்த அளவுக்கு நசுக்கப்பட்டது என்பது எல்லாம் அவருக்கு தெரியும்.

யார் படம் எடுத்தாலும் அவர்கள் குடும்பத்துக்கு, அவர்கள் சொல்லும் விலைக்கு தான் கொடுக்க வேண்டும். அதேபோன்று அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் திரைப்பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர் சங்கங்களிலும் அடி-தடிகள் நடந்து உள்ளன. தற்போது அவ்வாறு இல்லாமல், நாட்டில் நல்லது, நல்லாட்சி நடக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் தார்மீக ஆதரவு அ.தி.மு.க.விற்கு நிச்சயம் என்றும் இருக்கும். அவரிடம் ஆதரவு கேட்பது குறித்து கட்சி தான் முடிவு செய்யும்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. மேலும் புதிய கட்சிகளும் கூட்டணியில் இணையலாம். தேர்தலுக்கு நாட்கள் இருந்தாலும், தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அதனை வெளிப்படையாக கூற இயலாது, முழுவடிவம் பெற்றதும் தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன், வி.என்.ரவி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்
இளையராஜா அண்மையில் தொடங்கிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த்; ஸ்டுடியோவை சுற்றி பார்த்து, வியந்து கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என பாராட்டியுள்ளார்.
2. என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லை; கட்சி தொடங்கவில்லை நடிகர் ரஜினிகாந்த் - பரபரப்பு அறிக்கை
கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
3. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
4. நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
5. நடிகர் ரஜினிகாந்திடம் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்
நடிகர் ரஜினிகாந்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்