மாநில செய்திகள்

இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை + "||" + Devotees not allowed to bathe in the sea at Thiruchendur temple today and tomorrow

இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடைபெற்றது.

ெகாரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், மற்றகால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ேகாவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்றும், நாளையும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு
இன்றும், நாளையும் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
2. இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
5. இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
இன்றும், நாளையும் கடைகள் அடைக்கப்படுவதால் திருச்சி மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.