மாநில செய்திகள்

“தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + "It will continue to rain in Tamil Nadu and Pondicherry till January 10" - Meteorological Center

“தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்

“தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

01.01.21: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். 02.01.21: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

03.01.21, 04.01.21 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.

தமிழகத்தில் இந்தாண்டு இயல்பை விட வடகிழக்கு பருவமழை 33 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், உள்மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 562 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இதுவரை 7,62,604 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. மார்ச் 5: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
4. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு: புதிதாக 543 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 482 பேருக்கு தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.