தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,986 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,200 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 911 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 8,04,239 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் 7,547 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு முழுமையான விமான சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.