மாநில செய்திகள்

வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி + "||" + Three killed in truck crash near vellakoil

வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்

கோவை மாவட்டம் வெள்ளலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி (39). தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஒரு காரில்,சாமி கும்பிட  கும்பகோணம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.  இன்று அதிகாலை 4.30 மணிக்கு, வெள்ளகோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் அவர்கள் சென்ற கார் மோதியது.

இதில், காரின் ஒரு பகுதி முழுவதுமாக லாரிக்குள் புகுந்தது . இதில் காரை ஓட்டி வந்த மயில்சாமி, அவருடைய மனைவி இந்து (37), உறவினர் கவுசல்யா (60) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இவர்களது உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மயில்சாமி மகன் கவுதம் (12), மகள் ரம்யா (10), மயில்சாமியின் தங்கை கலைவாணி (35) ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இவர்கள் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு கார் ஓட்டியதால் விபத்து 3 பேர் பலி
மடியில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காரை ஓட்டியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. சிதம்பரம் அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி - 22 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, அரசு குளிர்சாதன சொகுசுப் பஸ்ஸும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி
விசாகபட்டினம் அருகே சுற்றுலா பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
5. தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.