நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,00,75,950 ஆக உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சமீப காலங்களாக தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.
இதேபோன்று, இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் கடந்த 2020ம் ஆண்டு மே மாத இறுதியில் இருந்து சீராக உயர்ந்து வந்துள்ளது. இன்று (ஜனவரி 10) வரையிலான நிலவரப்படி, நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 96.42 சதவீதம் ஆக உயர்வடைந்து உள்ளது.
இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், குணமடைந்தோர் எண்ணிக்கையானது கடந்த மே மாதம் 31ல் 86,984 (47.76%) ஆக இருந்தது. ஜூன் 30ல் 3,34,822 (59.07%) ஆகவும், ஜூலை 31ல் 10,57,805 (64.55%) ஆகவும், ஆகஸ்டு 31ல் 27,74,801 (76.63%) ஆகவும், செப்டம்பர் 30ல் 51,87,825 (83.33%) ஆகவும் இருந்தது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,00,75,950 ஆக உள்ளது. இது 96.42% ஆகும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.