தேசிய செய்திகள்

துபாயில் இருந்து ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இந்தியாவுக்கு கடத்தல் + "||" + Smuggling of 18 lakh cigarettes worth Rs 3.24 crore from Dubai to India

துபாயில் இருந்து ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இந்தியாவுக்கு கடத்தல்

துபாயில் இருந்து ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இந்தியாவுக்கு கடத்தல்
துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து அவ்வப்போது கோகைன், அபின் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வந்தனர்.

துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தல் பொருட்கள் வருகின்றன என அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது.  இதனை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.  இதில், கன்டெய்னர் ஒன்றில் சரக்கோடு சரக்காக மறைத்து வைத்து சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்பட்டு உள்ளன.

அதனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.3.24 கோடி மதிப்பிலான 18 லட்சம் சிகரெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.  அவை, சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் குடாங் கரம் ரக சிகரெட்டுகள் ஆகும்.  அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நூதன முறையில் 3.46 கிலோ தங்கம் கடத்தல்; துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேர் கைது
துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேரிடம் இருந்து ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.
2. தஞ்சை அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்; 2 பேர் கைது
தஞ்சை அருகே டிரைவரை தாக்கி காரை கடத்திய 2 பேரை புதுக்குடி சோதனை சாவடியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
3. புனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த 7 ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெம்போவுடன் கடத்தல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
புனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த 7 ஆக்சிஜன் சிலிண்டர்களை டெம்போவுடன் மர்மநபர்கள் கடத்தி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
4. செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தல் 5 பேர் கைது
செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தப்பட்டார். இது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. காரில் மதுபானம் கடத்தல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது
காரில் மதுபானம் கடத்தல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது.