தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வேண்டுகோள் + "||" + Show support to farmers Rahul Gandhi appeals to Prime Minister Modi

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 47வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'முதலாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள், இன்னும் நேரம் இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.

மேலும், 2015ல் மக்களவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு தேவை. எனவே மக்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்து 'இந்திய விவசாயிகளுக்கு குரல் கொடுப்போம்' என்ற பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.