ராயபுரம் தொகுதியில் தன்னை எதிர்த்து முக ஸ்டாலின் போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை அடையாறு ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார்.
மேலும் அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும். திமுகவினர் நாகரிகமாக பேச வேண்டும் என்றார்.
மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று சீமான் மற்றும் குஷ்பு உள்ளிட்ட ஒரு சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.