தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 33 ஆயிரம் டன் கோவிட் கழிவுகள் சேகரிப்பு + "||" + India Generated Around 33,000 Tonnes COVID-19 Waste In Last 7 Months

நாடு முழுவதும் 33 ஆயிரம் டன் கோவிட் கழிவுகள் சேகரிப்பு

நாடு முழுவதும் 33 ஆயிரம் டன் கோவிட் கழிவுகள் சேகரிப்பு
கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து 33 ஆயிரம் டன் அளவிற்கு கொரோனா தொற்று கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முக கவசம், கையுறை, முழு பாதுகாப்பு கவச உடை போன்றவற்றை பொதுமக்களும், மருத்துவ பணியாளர்களும் பயன்படுத்தி வருகிறார்கள். அதன்பிறகு அப்பொருட்கள் கழிவுகளாக குவிக்கப்படுகின்றன.

முழு பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், காலணி உறைகள், கையுறைகள், மனித திசுக்கள், ரத்தம் தோய்ந்த பொருட்கள், காயத்துக்கு போடப்பட்ட கட்டுகள், காட்டன் பஞ்சுகள், ரத்தம் தோய்ந்த படுக்கைகள், ரத்த உறைகள், ஊசிகள் ஆகியவை கொரோனா தொடர்பான உயிரி மருத்துவ கழிவுகளாக கருதப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று மருத்துவகழிவுகளாக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 33 ஆயிரம் டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூறி இருப்பதாவது: 

பயோ மெடிக்கல் கழிவுகளாக கையுறைகள், முககவசங்கள் பிபிஇ கிட்டுகள் ஷூ கவர்கள் ஊசிகள், ரத்த பைகள் உள்ளிட்டையாகும். கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாத வரையிலான ஏழு மாதகால கட்டிங்களில் அதிக கழிவுகளை கொண்ட மாநிலமாக மராட்டிய 5,367 டன் அளவிற்கு கழிவுகளை ஏற்படுத்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தல் கேரளா 3,300 டன், குஜராத் 3,086 டன், தமிழ்நாடு 2,806 டன், உத்தர பிரதேசம் 2,502 டன், டெல்லி 2,471 டன், மேற்கு வங்காளம் 2,095 டன், கர்நாடகா 2,026 டன் அளவிற்கு கழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. 

மாதங்கள் வாரியாக செப்டம்பரில் நாடுமுழுவதும் 5,490 டன் கழிவுகள், அக்டோபரில் 5,597 டன், நவம்பர் 4,864 டன் டிசம்பர் 4,530 டன் அளவிற்கு கழிவுகள் சேகரிப்பு செய்யப்பட்டுள்ளது என மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.