உலக செய்திகள்

நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருகை + "||" + Nepal Foreign Minister Pradeep Kumar Gyawali is scheduled to visit India on January 14 caretaker Prime Minister KP Sharma Oli

நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருகை

நேபாள வெளியுறவுத்துறை மந்திரி ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருகை
நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி ஜனவரி 14-ம் தேதி இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
காத்மண்டு,

இந்தியாவுக்கு மிக நெருங்கிய நட்பு நாடாக நேபாளம் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீப காலமாக அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே 1800 கி.மீ. நீள எல்லை உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதையொட்டி லிம்பியாதுரா, கலாபாணி ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. இவை இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. அதில் 3 பகுதிகளையும் தங்கள் நாட்டின் பகுதி என்று காட்டியிருக்கிறார்கள்.

1816-ம் ஆண்டு நேபாளத்துக்கும், அப்போதைய இந்திய ஆங்கிலேயே அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய எல்லையை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில், நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி ஜனவரி 14-ம் தேதி இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு தற்காலிக பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் வெளியிட்ட புதிய வரைபடம் குறித்தும்பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்துள்ளார்.