மாநில செய்திகள்

ஆன்லைன் கந்து வட்டி கடன் மோசடி; கைதான சீன நாட்டினரின் பின்னணி பற்றி விசாரணை + "||" + Online usury loan fraud; Investigation into the background of the arrested Chinese nationals

ஆன்லைன் கந்து வட்டி கடன் மோசடி; கைதான சீன நாட்டினரின் பின்னணி பற்றி விசாரணை

ஆன்லைன் கந்து வட்டி கடன் மோசடி; கைதான சீன நாட்டினரின் பின்னணி பற்றி விசாரணை
ஆன்லைன் கந்து வட்டி கடன் மோசடியில் கைதான சீன நாட்டினரின் பின்னணி பின்னணி குறித்த தகவல்களை தரும்படி டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை,

ஆன்லைன் கந்து வட்டி கடன் மோசடி வழக்கில் சீனாவைச் சேர்ந்த இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு முறைகேடாக செல்போன் சிம்கார்டு கொடுத்து உதவியதாக 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த வழக்கில் கைதான சீனர்கள் இருவரும் முறைகேடான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இது பற்றி மத்திய அரசின் அமலாக்கத்துறையினரும் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தவழக்கு தொடர்பான விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு பெற்றனர். கைதாகி சிறையில் உள்ள சீனர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

கைதான சீனர்கள் இருவரும் விசா முடிந்த நிலையில் தொடர்ந்து பெங்களூருவில் தங்கி இருந்து ஆன்லைன் கந்து வட்டி செயலியை தொடங்கி மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பின்னணி குறித்த தகவல்களை தரும்படி டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளி ஒருவரையும் தேடி வருகிறார்கள்.