உலக செய்திகள்

இங்கிலாந்தில் மேலும் 54, 940- பேருக்கு கொரோனா + "||" + UK Covid cases crossed 3 Million

இங்கிலாந்தில் மேலும் 54, 940- பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் மேலும் 54, 940- பேருக்கு கொரோனா
இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
லண்டன்,

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.  புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவுவதால், இங்கிலாந்து திணறி வருகிறது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54,940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,72,349 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 81,431 ஆக அதிகரித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு மரணம்; 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம்
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து
ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு; இங்கிலாந்து ரகத்தை சேர்ந்தது அல்ல !
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை; உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு நேரில் செல்கிறது
கொரோனா உருவானது எப்படி என்று நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது.