உலக செய்திகள்

பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம் + "||" + 7 officials suspended for negligence after massive power failure in Pakistan

பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம்

பாகிஸ்தான் மின் தடை: அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகள் இடை நீக்கம்
மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தான் முழுவதும் இருளில் மூழ்கியது.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குத்து மின் உற்பத்தி நிலையம் உள்ளது. நாட்டின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான இங்கு உற்பத்தி மற்றும் வினியோக அமைப்பில் நேற்று முன்தினம் இரவு 11.40 மணியளவில் திடீரென மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட இந்த கோளாறு காரணமாக, அது தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. அமைப்பின் அலைவரிசை 50-ல் இருந்து பூஜ்ஜியத்துக்கு வந்து விட்டது.இதனால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இருளில் மூழ்கியது. குறிப்பாக தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், முல்தான் உள்ளிட்ட பெரு நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாகிஸ்தான் முழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த மின்சார துண்டிப்பால் அந்த நள்ளிரவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மின்சார வினியோகத்தை சீரமைப்பதற்காக உயர் வல்லுனர்கள், என்ஜினீயர்கள் கொண்ட குழுவினர் களத்தில் இறங்கினர். இந்த பணிகள் நீண்ட நேரமாக நடந்தது. இதன் பயனாக ஓரிரு இடங்களில் முற்றிலுமாகவும், சில பகுதிகளில் பாதியளவுக்கும் மின் வினியோகம் சீரடைந்தது. இந்த சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக மின்சாரத்துறை மந்திரி உமர் அயூப் கான் தெரிவித்தார்.


இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘இந்த திடீர் கோளாறு காரணமாக 10,320 மெகாவாட் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதை நாம் அடுக்கு விளைவு என்று கூறுவோம். மின்நிலைய பாதுகாப்பு அமைப்பின் அலைவரிசை பூஜ்ஜியத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்’ என தெரிவித்தார். இந்த திடீர் முடக்கம் குறித்து பிரதமர் இம்ரான்கானுக்கு எடுத்துரைத்து இருப்பதாக கூறிய அயூப்கான், நாடு முழுவதும் மின்சார வினியோகம் சீரடைய இன்னும் நேரம் தேவைப்படும் எனவும் கூறினார்.

குத்து மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள வினியோக அமைப்பு பழமையானது எனக்கூறிய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஷிப்லி பராஸ், இதை முந்தைய அரசுகள் புறக்கணித்ததே இந்த பிரச்சினைக்கு காரணம் என குற்றம் சாட்டினார். இதற்கிடையே, பணியின் போது  அலட்சியமாக செயல்பட்டதாக 7 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து  பாகிஸ்தான் மத்திய மின்சார விநியோக நிறுவனம்  நடவடிக்கை எடுத்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதாரசரிவு:பாகிஸ்தான் மிகப்பெரிய பூங்காவை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்
பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன -ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறினார்.
3. பாகிஸ்தானில் பெரிய அளவில் மின் தடை: முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின
பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின் தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
4. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
5. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ - வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தல்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்தார்.