கொரோனா தடுப்பூசி விவகாரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை + "||" + PM Modi to meet chief ministers on Monday over Covid-19 vaccine rollout
கொரோனா தடுப்பூசி விவகாரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார்.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன? அதற்காக எவ்வாறு தங்களை தயார்படுத்தியுள்ளன? மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் எவ்வாறு இருக்கிறது? முறையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பரிசோதனைகள் போதுமான அளவு செய்யப்படுகிறதா? என்பதை முதல்-மந்திரிகளிடம், பிரதமர் மோடி கேட்டு அறிந்துகொள்கிறார்.
மேலும் கொரோனா தடுப்பூசி போடும்போது மாநில அரசுகள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பிரதமர் மோடி, முதல்-மந்திரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
‘கோவிஷீல்டு', ‘கோவேக்சின்' ஆகிய 2 தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட பிறகு, மாநில முதல்-மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.